இலங்கை கடற்படையினர் நீர்கொழும்பு கடற்பரப்பில் 180 கிலோ கிராம் போதைப்பொருளை மீட்டுள்ளதுடன், இதன்போது நான்கு சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

அதன்படி 100 கிலோ கிராம் ஐஸ் எனப்படும் போதைப்பொருள், 80 கிலோ கிராம் ஹாஷிஷ் போதைப்பொருள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக டிசில்வா தெரிவித்தார்.

இதன்போது நான்கு சந்தே நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்திய படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதானவர்கள் சிலாபத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நேற்றிரவு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம், புலனாய்வு சேவை மற்றும் விமானப்படை ஆகியவற்றுடன் கடற்படை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக நடவடிக்கைகளுக்காக கைதான சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.