தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வை அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறினார்.

எனினும் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் மறு அறிவித்தல் வர‍ை தொடர்ந்தும் பூட்டப்பட்டிருக்கும் என்றும் அங்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.