இந்தியாவுக்கு அதிர்ச்சி ; போட்டியை திசைமாற்றிய மே.இ. தீவுகள் (படங்கள் இணைப்பு)

By Presath

04 Aug, 2016 | 11:35 AM
image

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி  வெற்றித் தோல்வியின்றி நிறைவடைந்தது.

இந்த போட்டியின் வெற்றி இந்திய அணி வசமிருந்த நிலையில்  ரொஸ்டன் சேஸின் துடுப்பாட்டத்தின் காரணமாக சமநிலையில் முடிவடைந்தது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி  196 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பிளக்வுட் மாத்திரம் 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் அஸ்வின் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 500 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுகளை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டுள்ளது.

இந்தியா அணி சார்பில் கே.எல் ராகுல் 158 ஓட்டங்களையும், ரஹானே 108 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் சேஸ் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இதேவேளை இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 304 ஒட்டங்கள் பின்னடைவில் இருந்து துடுப்பெடுத்தாட வேண்டிய நிலையில் ஏற்பட்டது.

இந்நிலையில் 4 ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் 48 ஒட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தவேளை மழைக் குறுக்கிட்டது. தொடர்ந்து மழைப்பெய்ததில் 4 ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை இறுதிநாளான நேற்று (03) இந்திய அணி வெற்றிபெறும் நோக்கில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

எனினும் இறுதிநாளில் 2 விக்கட்டுகளை மாத்திரமே இந்திய அணி கைப்பற்ற முடிந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் ரொஸ்டன் சேஸ் ஆட்மிழக்காமல் 137 ஒட்டங்களையும்,ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 64 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டதுடன், பிளக்வுட் 63 ஒட்டங்களையும், டொவ்ரிச் 74 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியை தோல்வியிலிருந்து மீட்டனர்.

இந்நிலையில்  5 ஆம் நாள் ஆட்டநேர முடிவின்போது மேற்கிந்திய தீவுகள் அணி 388 ஒட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15