ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் எமிரெட் 651 விமானத்தின் மூலம் இத்தாலி மற்றும் வத்திகனுக்கான விஜயத்தை மேற்கொண்டார். 

இதன்போது அவர் ஜனாதிபதி பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார் எனவும் அவர் 2 நாட்கள் அங்கு தங்கி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், இரண்டாவது முறையாக அவர் பாப்பரசரை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(kapila)