வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்தினை ஏற்ப்படுத்திய இளைஞரை வவுனியா போக்குவரத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

வவுனியா நகர் பகுதியில் இருந்து கோவில்குளம் நோக்கி பயணித்த இலகு ரக வாகனம் ஹொறவப்பொத்தானை வீதியால் திரும்ப முற்பட்டபோது பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் தூக்கி வீசப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிளை அந்த பகுதியிலேயே விட்டுவிட்டு தலைமறைவாகியிருந்தார். 

எனினும் பொலிசாரால் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிவித்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.