உலகம் முழுவதும் இன்று 500 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுநீரக செயலிழப்பிற்கு ஆளானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ரெட் மீட் என்றழைக்கப்படும் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றை முழுவதுமாகவும், முறையாகவும் பதப்படுத்தாமல் சாப்பிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வகையான இறைச்சிகள் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகின்றன என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் சிங்கப்பூர் பல்கலைகழக மருத்துவ விஞ்ஞானிகள்.
மேலும் இது தொடர்பான ஆய்வறிக்கையில், ‘மாட்டிறைச்சி, செம்மறியாட்டுக்குட்டியின் இறைச்சி மற்றும் வெண் பன்றியின் இறைச்சியை ஊட்டசத்து நிபுணர்களின் பரிந்துரைக்கும் அளவை விட அதிகமாகவும், அவர்களின் பரிந்துரையில்லாமல் இயல்பை விட அதிகமாகவும் உட்கொள்பவர்களுக்கு சிறுநீரக குறைபாடுகள் ஏற்படுவதுடன், சிறுநீரக செயலிழப்பும் உருவாகின்றன என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதிலும் பதப்படுத்தாமல் சாப்பிடும் போது இதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன் இவ்வகையான இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு இதிலிருக்கும் புரதசத்தினால் நாள்பட்ட சிறுநீரக குறைபாடு மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உண்டு என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
அதேசமயத்தில் இதிலிருக்கும் புரதசத்தினைப் போலவே முட்டை, மட்டி, பருப்பு வகைகள், கோழி ஆகியவற்றிலும் இருக்கிறது. இதனை அளவுடன் பயன்படுத்தினால் இத்தகைய பாதிப்பு ஏற்படும் வீதம் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
டொக்டர் வி. மாறன் M.S.,
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM