நாட்டில், தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

நாளை (04.01.2021)அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலிலிருந்து குறித்த சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு, மிரிஹானை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  தமிழ்நாடு என்பன நாளையுடன் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இதேவேளை பேலியகொடவத்தை, மீகஹவத்தை கிராம சேவகர் பிரிவு, ரோஹன விஹார மாவத்தை, நள்ளிகஹவத்தை, பூரணகொட்டுவத்தை ஆகிய பகுதிகளும் நாளை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.

அத்தோடு கிரிபத்கொட - விலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஸ்ரீ ஜயந்தி மாவத்தையும் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.