நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேக் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர். 

இவர்கள் இன்று காலை 9.55 மணிக்கு கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இலங்கைக்கு வந்துள்ள நோர்வே பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

- kapila