உக்ரைனிலிருந்து சுற்றுலாப்பயணிகளை வரவழைத்தது ஏன்?: நோக்கம் இதுவா? - முஜிபுர் கேள்வி

Published By: J.G.Stephan

03 Jan, 2021 | 11:56 AM
image

(எம்.மனோசித்ரா)
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகக் கூறி , அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களின் வணிகத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் தான் ஆகஸ்ட் மாதம் முதல் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நாடான உக்ரைனிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட் அச்சுறுத்தலால் கொழும்பில் பல பகுதிகள் சுமார் 2 மாத காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களின் பின்னரும் அவற்றை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க முடியாத நிலையிலிருந்து கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளமை தெளிவாகிறது. ஆரம்ப கட்டத்திலேயே பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரித்து விரைவில் கொழும்பை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாம் வலியுறுத்திய போதும் அரசாங்கம் அதற்கான எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

இவ்வாறான நிலைமைக்குள் சுற்றுலாத்துறையை ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் முதற்கட்டமாக  உக்ரையினிலிருந்து சுற்றுலா பிரயாணிகள் வரழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் உக்ரைன் நாட்டில் பல மில்லியன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் நாட்டிலிருந்து சுற்றுலாப்பிரயாணிகள் வரழைக்கப்படுகின்றமை முறையற்ற செயற்பாடாகும். அந்நாட்டிலிருந்து வந்தவர்களில் சிலருக்கு தற்போது தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பிலும், அவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பிலும் அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களின்  வணிகத்தை மேம்படுத்துவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்களது சுற்றுலாக் காலம் நிறைவடைந்துவிடும். அவ்வாறிருக்கையில் எவ்வாறு சுற்றுலாத்துறை மேம்படும்? இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காமல் முறையாக சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-12-11 12:11:38
news-image

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட...

2024-12-11 11:56:43
news-image

புத்தளத்தில் விற்பனை நிலையம் ஒன்றில் திருட்டு...

2024-12-11 11:42:37
news-image

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மூதாட்டி...

2024-12-11 11:57:18
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2024-12-11 11:10:42
news-image

தீயில் முற்றாக எரிந்து நாசமான வீடு!...

2024-12-11 11:15:14
news-image

அனுரவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான...

2024-12-11 11:04:21
news-image

கொழும்பு துறைமுக திட்டத்திற்கு அமெரிக்க நிதியை...

2024-12-11 10:38:06
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2024-12-11 10:33:39
news-image

”பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களை...

2024-12-11 10:44:56
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்தவர் சிகிச்சை...

2024-12-11 10:19:06
news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம்...

2024-12-11 09:55:45