தீவிரவாதிகளின் தாக்குதலில் மாலியில் இரு பிரான்ஸ் வீரர்கள் உயிரிழப்பு!

Published By: Vishnu

03 Jan, 2021 | 10:13 AM
image

மாலியில் சனிக்கிழமையன்று இரு பிரான்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரேனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாலியின் கிழக்கு பிராந்தியமான மேனகாவில் சனிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போதே பிரான்ஸ் படையின் சார்ஜென்ட் யுவோன் ஹுய்ன் என்ற 33 வயதுடைய பெண்ணொருவரும், பிரிகேடியர் லோயிக் ரிஸர் என்ற ஆணொருவருமே உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை தாக்குதலில் காயமடைந்த மேலும் ஒரு வீரர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாலியில் உள்ள அல்-கொய்தா பயங்கரவாதக் குழுவின் ஒரு கிளையான ஜமாஅ நுஸ்ரத் உல்-இஸ்லாம் வா அல்-முஸ்லிம் (JNIM) என்ற அமைப்பினர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட  ஜிஹாதிஸ்ட்-கண்காணிப்பு புலனாய்வு குழுவொன்று (SITE) தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பினர் மாலியில் இருந்து பிரான்ஸ் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி மாலியின் மத்திய மொப்தி மாகாணத்தின் ஹோம்போரி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தாக்குதலின் போதும் மூன்று பிரான்ஸ் வீரர்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47