போயிங் எப்/ஏ -18 சூப்பர் ஹார்னெட் போர் விமானங்களை கடற்படையின் போர் கொள்முதல் செய்வதற்கான செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய கடற்படையின் விமான தாங்கிகளுடன் பொருந்தக்கூடிய தன்மையை வெற்றிகரமாக நிரூபிப்பதாக அறிவித்தது.

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள கடற்படை விமான நிலையமான பேட்யூசண்ட் ஆற்றில் கரையோரத்தில் நடைபெற்ற இந்த பரீட்சாயத்த நடவடிக்கையில் எப்/ஏ -18 சூப்பர் ஹார்னெட் இந்திய கடற்படையின் ‘ஷார்ட் டேக்ஆப்’ முறையை சிறப்பாகச் நிறைவு செய்துள்ளது.

“ஒரு ஸ்கை-ஜம்பிலிருந்து’ எப்/ஏ -18 சூப்பர் ஹார்னெட்டின் முதல் வெற்றிகரமான மற்றும் பாதுகாப்பான ஏவுதலானது இந்திய கடற்படை விமானம் தாங்கிகளிடமிருந்து திறம்பட செயல்படுவதற்கான சரிபார்ப்பு செயல்முறையின் ஆரம்பமாகும் என்று என்று போயிங் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் இந்திய போராளிகள் விற்பனைப்பிரிவின் தலைமை அதிகாரி அங்கூர் கனாக்லேகர் கூறினார்.

அத்துடன் இந்தச் செயற்பாடானதுஇந்திய கடற்படையின் தேவைகளின்படி இரண்டு ஆண்டுகள் இடம்பெற்று வரும் ஆய்வினதும் மற்றும் உருவகப்படுத்துதல்களின் உச்சமான செயற்பாடாகும் என்பது விசேடமானதாகும்.

எப்/ஏ -18 Block III சூப்பர் ஹார்னெட் இந்திய கடற்படைப் போர்க்களுக்கான அதியுச்ச திறனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடற்படை விமானத்தில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை மேலும் பிணைப்பதாக உள்ளதாவும் கனாக்லேகர் கூறினார்,

இது இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதோடு இரு தரப்பு இணைச் செயற்பாடுகளும் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.