(ஆர்.ராம்)

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதா இல்லை புதைப்பதா என்பது தொடர்பிலான தீர்மானம் எடுப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்களின் அறிக்கைகளை அரசாங்கம் மூடுமந்திரமாக வைத்திருப்பது ஏன் என்று முஸ்லிம்காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிபுணர்கள் குழுவின் விஞ்ஞான பூர்வமான அறிக்கை கூட பகிரங்கப்படுத்தாமையானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும்ரூபவ் அச்சமான நிலைமையொன்றை உருவாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதாரூபவ் புதைப்பதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியிமிக்கப்பட்ட 11பேர் கொண்ட இரண்டாவது குழுவின் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலங்களை எரிக்கவும் முடியும் புதைக்கவும் முடியும் என்ற வழிகாட்டலை உலக சுகாதார நிறுவனமே வழங்கியுள்ளது.

அவ்வாறிருந்தபோதும் இலங்கையில் இந்த விடயத்தில் எதேச்சதிகாரமான தீர்மானம் எடுக்கப்பட்டு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடலங்கள் எரிக்கப்பட்டே வந்தது.

இந்த செயற்பாடானது உயிரிழந்த பின்னர் கூட இறுதிக்கட்டமையை தமது கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு அமைவாக முன்னெடுக்க முடியவில்லை என்ற ஆழ்ந்த கவலையும் ஆதங்கமும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருந்தது.

மேலும் இவ்வாறான செயற்பாட்டினை கைவிட்டு முஸ்லிம்களுக்குள்ள உரிமைகளை வழங்குமாறு கோரியபோதும் அது தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டே வந்தது.

இதனால் இனரீதியாக தாம் பாகுபடுத்தப்படுகின்றோம் என்ற மனோநிலை அதிகளவான முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. அதுமட்டுமன்றி தமது உரிமைக்காக அவர்கள் ஜனநாயக முறையில் போராடியும் இருந்தார்கள்.

அந்த மக்களின் பிரதிநிதிகளாக நாமும் அடக்கம் செய்யும் உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக விஞ்ஞான பூர்வமான உதாரணங்களை முன்வைத்து பல்வேறு தளங்களில் கோரிக்கைகளை தொடர்தேச்சியாக முன்வைத்து வருகின்றோம்.

வலியுறுத்திக் கூறி வருகின்றோம். ஆனால் அதற்கான சாதகமான நிலைமைகள் இற்றைவரையில் ஏற்படவில்லை என்பது வருத்தமளிக்கின்றது.

இந்த நிலையில் அரசாங்கம் நிபுணர்கள் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே தீர்மானம் எடுப்பதாக கூறிவருகின்றது. கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதா, புதைப்பதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கம் ஒன்றுக்கு இரண்டு குழுக்களை நியமித்துள்ளது.

இந்தக் குழுக்களில் ஒன்றாகவுள்ள பேராசிரியர் ஜெனீபர் பெரேரா தலைமையிலான 11பேர் கொண்ட குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்டு அது ஆட்சியாளர்களிடத்திலும் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. 

அந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்தால் அதனைப் பகிரங்கப்படுத்தாது அந்த அறிக்கையை மூடுமந்திரமாக வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.

விடயமொன்றில் சர்ச்சைகள் ஏற்படுகின்றபோது நிபுணர்குழு விஞ்ஞான பூர்வமான விடயங்களை ஆராய்வதற்காகவும் உரிய சான்றாதாரங்களுடன் விடயங்களை கையாள்வதற்காகவுமே நியமிக்கப்படுகின்றமை வழமையாகும். அவ்வாறு நியமிக்கப்படுகின்ற குழுவின் அறிக்கைகளை அரசாங்கம் பகிரங்கப்படுவதே நியதியாகும்.

ஆனால் ஜனாஸாக்களை எரிப்பதா புதைப்பதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நிபுணர்குழுக்களின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

இவ்விதமான செயற்பாடுகள், ஒருசமூகத்தின் அடிப்படை உரிமைகளை நிராகரிப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்றவா என்ற நியாயமான கேள்விகளையும் இனரீதியான அச்சப்பாடுகளையும் அதிகரிகச் செய்வதாக உள்ளது என்றார்.