சோளப் பயிர்ச்செய்கையில் படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 

நாவலப்பிட்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இது தொடர்பில் கூறினார்.

சோளப்பயிர்ச்செய்கையில் ஐந்து வீதம் படைப்புழுத் தாக்கத்தினால் சேதமடைந்திருக்கிறது. இம்முறைபெரும்போகத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்யெடர் பரப்பில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.