ஆர்ஜென்டினாவில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த பார்வையற்ற நாயை மற்றொரு நாய் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்டது.

ஜூலியட்டா ஃபிர்போ என்பவர் 14 வயதான லூனா என்ற பிட்புல் ரக நாயையும், கைப்பிரின்ஹா என்ற மற்றொரு நாயையும் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட பிட்புல் நாய் முற்றிலும் பார்க்கும் சக்தியை இழந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் பார்வையற்ற லூனா விழுந்து விடவே, பதற்றமடைந்த கைப்பிரின்ஹா அங்குமிங்கும் ஓடியது.

பின்னர் நீச்சல் குளத்தின் நாலாபுறம் சுற்றி வந்த கைப்பிரின்ஹா இறுதியில் பிட்புல்லின் கழுத்தைக் கவ்வி லாவகமாக கரையேற்றியது.