மாமனாரொருவர், தனது மருமகளை கொலை செய்து சடலத்தை பிளாஸ்டிக் பையிலிட்டு கடற்கரையில் தூக்கி வீசிய சம்பவமொன்று இந்தியா - மும்பையில் இடம்பெற்றுள்ளது.   

மும்பையை சேர்ந்தவர் பங்கஜ் என்பவர், கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் நந்தினி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் பங்கஜின் தந்தை கமல் ராய்க்கு (55) விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. 

காரணம், மருமகள் மீது அவருக்கிருந்த சந்தேகமே ஆகும். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பங்கஜ் வேலைக்கு சென்றுள்ள சமயம் பார்த்து, தனியாக இருந்த நந்தினியை கொலை செய்ய கமல் தீர்மானித்துள்ளார்.

இதையடுத்து, தனது இரு நண்பர்கள் உதவியுடன் தூங்கி கொண்டிருந்த நந்தினி முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தை பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி கடற்கரை பகுதியில் தூக்கி வீசியுள்ளார். இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதுடன், பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தை கைப்பற்றியுள்ளதுடன், கமலையும் கைது செய்துள்ளனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் இது தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்த்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.