புத்தாண்டு தினத்தில் உலகில் 3.6 இலட்சம் குழந்தைகள் பிறப்பு

Published By: Gayathri

02 Jan, 2021 | 12:37 PM
image

புத்தாண்டு தினத்தில் உலகளாவிய ரீதியில் 3 இலட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என யுனிசெப் நிறுவனம் கணித்துள்ளது.

உலகளவில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை 10 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு யுனிசெப் நிறுவனம் கணித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் அறிவிப்பின் பிரகாரம்  புத்தாண்டு தினத்தில் 3 இலட்சத்து 60 ஆயிரம்  குழந்தைகள் உலகலாவிய ரீதியில் பிறந்திருக்கலாம் என கணித்துள்ளது.  

இதேவேளை, 2021 ஆம் ஆண்டில் 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பிறந்துள்ள குழந்தைகளின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2021 ஜனவரி முதலாம் திகதி புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகளும் சீனாவில் 35ஆயிரத்து 615 குழந்தைகளும் நைஜிரியாவில் 21ஆயிரத்து 439 குழந்தைகளும் பாகிஸ்தானில் 14ஆயிரத்து 161 குழந்தைகளும் பிறந்துள்ளன.

அத்துடன் எத்தியோப்பியாவில் 12ஆயிரத்து 6 குழந்தைகளும் அமெரிக்காவில் 10 ஆயிரத்து 312 குழந்தைகளும் எகிப்தில் 9 ஆயிரத்து 455 குழந்தைகளும் பங்களாதேஷில் 9ஆயிரத்து 236 குழந்தைகளும் கொங்கோ குடியரசில் 8 ஆயிரத்து 640 குழந்தைகளும் பிறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17