தனுஷுக்கு கிடைத்துள்ள புதிய விருது

Published By: Digital Desk 9

02 Jan, 2021 | 12:36 PM
image

சிறந்த நடிகருக்கான தாதா சாகிப் பால்கே விருது நடிகர் தனுஷுக்கு கிடைத்திருக்கிறது.

இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படுபவர் தாதா சாகிப் பால்கே. அவருடைய வாரிசுகளால் ஆண்டுதோறும் இந்தியாவின் பல பகுதிகளில் தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. 

எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி அன்று  மும்பை நட்சத்திர ஹொட்டலில் நடைபெறும் தாதா சாகிப் பால்கே பெயரிலான விருது வழங்கும் விழாவில் தமிழ் திரையுலகம் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் நடிகைக்கான விருது வழங்கும் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதில் 'அசுரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது, தனுஷுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

சிறந்த படமாக ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் வெளியான 'டூலெட்' என்ற படத்திற்கும், சிறந்த நடிகைக்கான விருது, 'ராட்சசி' படத்தில் நடித்த நடிகை ஜோதிகாவிற்கும், சிறந்த இயக்குனருக்கான விருது, 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற படத்தை இயக்கிய ஆர். பார்த்திபனுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிரூத் ரவிச்சந்திரனுக்கும் வழங்கப்படவிருக்கிறது.

தமிழில் சிறந்த பன்முகத் தன்மை வாய்ந்த நடிகருக்கான  விருதிற்கு தல அஜித் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். 

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் சிறந்த கலைஞர்களுக்கான தாதா சாகிப் பால்கே விருது பெறும் பட்டியல் வெளியாகி இருக்கிறது. 

சிறந்த நடிகருக்கான தாதா சாகிப் பால்கே விருது பெறும் தனுஷிற்கு அவரது இரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right