(எம்.எப்.எம்.பஸீர்)

கொவிட் 19 தொற்றுக்குள்ளான  38 தாய்மார்கள்,  கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலத்தில் 40 குழந்தைகளை பிரசவித்துள்ளதாக, குறித்த வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் மயூரமான தேவாலகே தெரிவித்தார்.

அனைத்து தாய்மார்களும் நலமான குழந்தைகளை பிரசவித்துள்ளதுடன், பிரசவத்தின் பின்னர் இரு குழந்தைகளுக்கு மட்டும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகள் தொடர்பில் சிகிச்சையளிக்க விஷேடமான வைத்தியசாலையாக கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலை உள்ளது.

 ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து குறித்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 38 தாய்மார்கள் கடந்த டிசம்பரில் 40 குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.  இதில் இரட்டை குழந்தைகளும் உள்ளடங்கும்.