நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஆலயடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 67 வயது ஆண், கொழும்பு 14 ஐ சேர்ந்த 91 வயது பெண், அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண் மற்றும் தர்கா நகரைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா காரணமாக  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு இன்று 555 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 826 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.