இன்றைய திகதியில் எம்மில் பலரும் ஆரோக்கியம் தொடர்பான அளவீடுகளை அவ்வப்போது எளிய முறையில் அறிந்து கொள்ள புதிய புதிய கருவிகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது தூக்கமின்மை பாதிப்பை அளவிட உதவும் புதிய கருவி அறிமுகமாகியிருக்கிறது.

எம்முடைய ஆரோக்கியத்தை தற்போது  டிஜிற்றல் தொழில் நுட்பத்துடன் இணைத்து அவதானிக்கிறோம். இதய ஆரோக்கியத்தை அறிய ஸ்மார்ட் கடிகாரங்களையும், உடலின் இரத்த சர்க்கரையை அறிந்துகொள்ள குளுக்கோமீற்றர் எனும் கருவியையும், காய்ச்சல் மற்றும் இதய நலனுக்காக பயோ மொனிட்டர் என்னும் கருவியும் பயன்படுத்தி வருகிறோம். 

இந்த வகையில் ஆரோக்கிய பாதிப்புக்கு முக்கிய காரணியாக திகழும் தூக்கமின்மையை துல்லியமாக அளவிட தற்போது கருவி ஒன்று அறிமுகமாகியிருக்கிறது.

இந்தக் கருவி உறக்கத்தில் எழுப்பும் குறட்டை அளவு, தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் ஏற்படும் சோர்வின் அளவு  தூக்கமின்மையின் அதாவது இரவில் எத்தனை முறை தூக்கத்திலிருந்து விழிக்கிறோம் என்பதையும்,  உறக்கத்தின் போது ஏதேனும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறதா? என்பதையும், உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது இதயத்துடிப்பு சமச்சீரற்ற தன்மை இருந்தாலோ அல்லது படபடப்பு ஏற்பட்டாலோ அதனையும் இந்த கருவி பதிவு செய்கிறது. உறக்கத்தின் போது எழுந்து சிறுநீர் கழிப்பதையும், எத்தனை முறை இதற்காக எழுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல விடயங்களையும், இதன் காரணமாக ஏற்படும் மன மாற்றத்தையும் இந்த கருவி பதிவு செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இத்தகைய கருவியின் மூலம் எம்முடைய தூக்கமின்மை பாதிப்பை அளவிட்டு அதனை மருத்துவரிடம் முறையாக தெரிவித்து அதற்குரிய ஆலோசனையும் சிகிச்சையும் பெற்று நாம் எம்முடைய ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க இயலும்.

டொக்டர் ராமகிருஷ்ணன்

தொகுப்பு அனுஷா.