(செ.தேன்மொழி)

கொஸ்கொட பகுதியில்  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பியகம பகுதியில் நேற்று இரவு 9.45 மணியளவில்  சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞனுக்கும் பிரிதொரு நபருக்குமிடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், பின்னர் குறித்த நபர் இளைஞரை கூரிய ஆயுத்தால் தாக்கியுள்ளார். 

இதன்போது, படுகாயமடைந்த இளைஞன் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பியகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில்  சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.