Published by T. Saranya on 2021-01-01 16:44:06
அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய கீதத்தின் பாடல் வரிகளில் மாற்றம் செய்து பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.

அதாவது, பழங்குடியின மக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவுஸ்திரேலிய அரசு தேசிய கீதத்தில் மாற்றம் செய்துள்ளது.
தேசிய கீதம் இனி அவுஸ்திரேலியா 'இளமையான, சுதந்திரமான' என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பழங்குடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாம் இளமையானவர்கள் என்று பொருள் தந்த இடம், தற்போது நாம் ஒன்றே என்று பொருள் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

ஒற்றுமைக்கான ஊக்கத்தை இந்த மாற்றம் உருவாக்கும் என்று நம்புவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.