புதிய வருடத்திலும் தொடர்வதற்கு இடமளிக்கக் கூடாது - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

By Gayathri

01 Jan, 2021 | 05:17 PM
image

(செ.தேன்மொழி)

கொவிட்-19 வைரஸ் பரவலினால்  கடந்த வருடத்தில் நாம் எதிர்க்கொண்டு வந்ந நெருக்கடி நிலமையை, உதயமாகியுள்ள இந்த புதிய வருடத்திலும் தொடர்வதற்கு இடமளிக்கக்கூடாது என்றும், அதனை தவிர்த்து செல்வதற்கு நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று எதிர்ப்பார்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடத்தில் ஒன்பது மாதங்கள் வரை நாம் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தோம். 

அதற்கமைய இந்த வைரஸ் பரவல் காரணமாக இன்னும் சிலபகுதிகள் முடக்கப்பட்டே காணப்படுகின்றன. 

எனினும், தற்போது புது வருடமொன்று பிறந்துள்ளது. உதயமாகியுள்ள புதியவருடத்தை வரவேற்பதுடன் கடந்த வருடத்தில்  நாம் எதிர்நோக்கிவந்த நெருக்கடி நிலைமை மீண்டும் உருவாகுவதற்கு இடமளிக்க கூடாது. 

அதனை தடுப்பது என்றால் அனைவரும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிப்பதுடன், சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

இதேவேளை, தேவையின்றி வீட்டை விட்டு வெளி பிரதேசங்களுக்கு செல்வதையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

இந்நிலையில், தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசித்து வரும் மக்கள், தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும். 

இதன்போது முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சட்டவிதிகளை நாட்டு மக்கள் அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு புறம்பாக செயற்படும் நபர்களை பொலிஸார் தொடர்ந்தும் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,நேற்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதற்கமைய கடந்த அக்டோபர் மாதம் 30 திகதி முதல் இதுவரையில் 2021 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பகுதியில்  நேற்று முன்தினம் 600 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது 24 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 

அதனால் தொடர்ந்தும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டீசலின் விலையை குறைக்க முடியாது -...

2022-10-03 16:15:16
news-image

வைத்தியர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால்...

2022-10-03 16:12:06
news-image

ரயில்வே திணைக்கள சொத்துக்களை கொள்ளையிட்ட மூவர்...

2022-10-03 17:03:50
news-image

மட்டு. கொக்கட்டிச்சோலையில் யானை தாக்கி விவசாயி...

2022-10-03 17:08:23
news-image

மண்சரிவு, வெள்ள அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க...

2022-10-03 16:56:26
news-image

கிழக்கு மாகாணத்தை ஆளுநர் நாசப்படுத்தியுள்ளார் -...

2022-10-03 16:23:08
news-image

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :...

2022-10-03 16:49:44
news-image

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைகிறது...

2022-10-03 16:07:56
news-image

சாய்ந்தமருது கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிரியை...

2022-10-03 16:25:17
news-image

கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியை...

2022-10-03 16:02:37
news-image

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளின்...

2022-10-03 15:27:04
news-image

சட்டவாக்க நிலையியற் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்...

2022-10-03 16:13:31