அரச நிர்வாகத்தை முன்னெடுக்க தகுதிவாய்ந்தவரிடம் ஒப்படைக்க வேண்டும்  - சம்பிக்க 

Published By: Digital Desk 4

01 Jan, 2021 | 03:31 PM
image

(நா.தனுஜா)

அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும் பொறுப்பு தகுதிவாய்ந்த பொருத்தமான நபர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அவ்வாறின்றி, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தமக்கு நெருக்கமானவர்களை மாத்திரம் உயர்பதவிகளில் அமர்த்துவதன் மூலம் நாட்டை முன்நோக்கிக் கொண்டுசெல்ல முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கிறார்.

எனவே நாட்டிற்கு அவசியமான பலம்வாய்ந்த பொருளாதார மற்றும் சமூகக்கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கு நாமனைவரும் எவ்வித பாகுபடுகளுமின்றி ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இவ்வருடத்தில் நாம் முகங்கொடுக்கக்கூடிய சமூக, பொருளாதார, சுகாதார ரீதியான சவால்கள் எத்தகையதாக இருக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

தற்போது ஒட்டுமொத்த உலகநாடுகளும் பாரிய சுகாதார நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கின்றன. 

அதனை எதிர்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வதற்கு முயற்சித்தாலும் கூட, அந்த நெருக்கடி மேலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் குறைந்தளவானோரே தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்ற வாதமொன்றை முன்வைக்கலாம்.

எனினும் நாடளாவிய ரீதியில் உயிரிழப்போருக்கு கொவிட் - 19 பரிசோதனையை முறையாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் அதிகளவானோருக்குத் தென்படாமை போன்றவற்றை கருத்திற்கொள்ளும் போது எமது நாடும் அச்சுறுத்தல் மிக்க நிலையிலேயே இருக்கின்றது.

அதேபோன்று இவ்விடயத்தில் முறையான செயற்திட்டமின்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஒட்டுமொத்த நாடும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது.

மேலும் நாட்டின் கடன்சுமை மற்றும் வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதில் காணப்படும் நெருக்கடி, பொருளாதார மந்தநிலை ஆகியவையும் நாட்டிற்குப் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும் பொறுப்பு தகுதிவாய்ந்த பொருத்தமான நபர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறின்றி, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தமக்கு நெருக்கமானவர்களை மாத்திரம் உயர்பதவிகளில் அமர்த்துவதன் மூலம் நாட்டை முன்நோக்கிக் கொண்டுசெல்ல முடியாது. 

மாறாக திறமையானவர்களிடம் நிர்வாகப்பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும். எனவே நாட்டிற்கு அவசியமான பலம்வாய்ந்த பொருளாதார மற்றும் சமூகக்கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கு நாமனைவரும் எவ்வித பாகுபடுகளுமின்றி ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25