காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

கீழ் குறிப்பிடப்படும் பிரதேசங்கள் இத் தருணத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்படுவதாக கொவிட் - 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

01. காத்தான்குடி பொலிஸ் பிரிவு

02. கல்முனை பிரதேசத்தில் கீழ் குறிப்பிடப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவு

 • கல்முனை 1
 • கல்முனை 1 C
 • கல்முனை 1 E
 • கல்முனை 2
 • கல்முனை 2 A
 • கல்முனை 2 B
 • கல்முனை 3
 • கல்முனை 3 A
 • கல்முனை குடி 1 (KALMUNAI KUDI 1)
 • கல்முனை குடி 2 (KALMUNAI KUDI 2)
 • கல்முனை குடி 3 (மKALMUNAI KUDI3)