இலங்கை மத்திய வங்கியானது 1950 ஆம் ஆண்டு அதன் தொழிற்பாடுகளைத் தொடங்கி இலங்கையின் சுபீட்சத்திற்கு அதன் தனித்துவமும் பெறுமதிவாய்ந்ததுமான பங்களிப்பின் 70 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. 

அதன் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இலங்கை மத்திய வங்கி, பின்வரும் முக்கிய அம்சங்களுடன் சுற்றோட்டத்திற்கு விடப்படாத ரூ.20 வகை ஞாபகார்த்த நாணயக் குற்றியொன்றினை வெளியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.

முதலாவது நாணயக் குற்றியானது நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் மத்திய வங்கியின் ஆளுனர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யூ. லக்ஷ்மனினால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.