நான்கு வருடங்கள், 27 வாரங்கள் மற்றும் இரண்டு நாட்களுக்குப் பிறகு நாட்டைப் பிளவுபடுத்திய வாக்கெடுப்புக்குப் பின்னர் பிரிட்டன் வியாழக்கிழமை இரவு ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறியது.

இது பிரிட்டனை அரசியல் ரீதியாகப் பிரித்து, நவீன காலங்களில் உலக அரங்கில் நாட்டின் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

பிரிட்டனின் வெளியேற்றமானது ஒரு சுயாதீனமான உலக சக்தியாக புதிய வாய்ப்புகளைத் தொடர நாட்டை விடுவிக்கும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

எனினும் விமர்சகர்கள் இது அதன் நெருங்கிய அண்டை நாடுகளுடனான பல தசாப்த கால ஒருங்கிணைப்பை மாற்றியமைக்கிறது மற்றும் பிரிட்டனை உடைப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதற்கும் அதன் சர்வதேச நிலையை குறைப்பதற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கூறிகின்றனர்.

இந் நிலையில் பிரிட்டன் பிரதமர், இது இந்த நாட்டிற்கு ஒரு அற்புதமான தருணம் என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்ததுடன்,எங்கள் கைகளில் எங்கள் சுதந்திரம் உள்ளது, நாம் அதைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய 2016 ஜூன் மாத வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக பெரும்பான்மையான பிரிட்டன்கள் வாக்களித்த நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

2016 இல் நடைபெற்ற வாக்கெடுப்பு பிரிட்டனின் ஒரு அரசியல் நெருக்கடியை கட்டவிழ்த்துவிட்டது. 

குறிப்பாக பிரதமர் போரிஸ் ஜோன்சனின் இரு  முன்னோடிகளான தெரசா மே மற்றும் டேவிட் கேமரூன் ஆகியோரின் அரசியல் வாழ்க்கையை திறம்பட முடிவுக்குக் கொண்டுவந்தது.

எவ்வாறெனினும் லண்டனுக்கும் பிரஸ்ஸல்ஸுக்கும் இடையிலான உறவு இப்போது அவர்களின் சமீபத்திய வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் மீட்டமைக்கப்படும்.

இது எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் பிற ஒப்பந்தங்களுடன் சூழப்பட்ட ஒரு குறுகிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகும்.

ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தின் முறையான விலகலுக்குப் பின்னர் தொடங்கிய "இடைக்கால காலம்" என்று அழைக்கப்படும் பல மாதங்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ஒரு வாரத்திற்கு முன்பு உடன்பாட்டுக்கு வந்தது.

இந்த ஒப்பந்தம் ஒரு குழப்பமான பிளவுக்கான வாய்ப்பைத் தவிர்க்கிறது மற்றும் சுங்கவரி அல்லது ஒதுக்கீடுகள் இல்லாமல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் பொருட்களை தொடர்ந்து பரிமாற்றம் செய்ய முடியும் என்பதை உறுதிசெய்கிறது.

அத்துடன் ஒரு வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் பவுண்டுகள் மற்றும் யூரோக்கள் மதிப்புள்ள வர்த்தகத்தை மென்மையாக்குகிறது.

ஆனால் பிரஸ்ஸல்ஸின் சுற்றுப்பாதையில் இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளமை புதிய விதிமுறைகள் மற்றும் வணிகத்திற்கான சிவப்பு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

குறிப்பாக புதிய விசா விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் நிலையில், பிரிட்டன் மற்றும் ஐரோப்பியர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், நாட்டிற்கும் கண்டத்திற்கும் இடையில் வேலை மற்றும் பயணம் உள்ளிட்ட விடயங்களில் மாற்றம் ஏற்படும்.