நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூலம் நாடு அபிவிருத்தியடைந்து வருகிறது. அந்த அபிவிருத்திப் பணிகளை பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிணைந்த எதிர்கட்சி சதிகாரச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. எனவே அவ்வணியினர் தமது  சுய நலனை அடிப்படையாகக் கொண்டு நாட்டையும் மக்களையும் பாதிக்கும் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஆகவே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இவ்வாறான செயற்பாடுகளை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒன்றிணைந்த எதிர்கட்சி நடத்திய பாதயாத்திரை மூலம் அவர்கள் எதிர்பார்த்த எந்தவொரு இலக்கினையும் அடையமுடியவில்லை. போராட்டங்கள் மற்றும் பாதயாத்திரைகளை நடத்தும்போது அதற்கென பொதுவான ஒழுங்குவிதிகள் உள்ளன. ஆனால் ஒன்றிணைந்த எதிர்கட்சி நடத்திய பாதயாத்திரையில் அந்த ஒழுங்கு விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

அதன்போது அவர்கள் நடந்துகொண்ட விதம் அநாகரிகமானமதாகும்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்திற்கு முன்னால் நடந்து கொண்ட முறை அநாகரிகத்தின் உச்சகட்தடதை பிரதிபலிக்கிறது. தமது கட்சித் தலைமையகத்திற்கு முன்னாலே அவ்வாறு நடந்துகொள்கிறார்க .ௌன்றால் அவர்கள் நடத்திய ஆட்சி பற்றி குறிப்பிடத்தேவையில்லை. 

மேலும் அவ்வணியினர் குறப்பிட்டதுபோல் பெருந்திரளான மக்ளை திரட்ட முடியாமல்ப்போனது. ஆகவேதான் லிப்டன் சுற்றுவட்டத்தில் இறுதிக் கூட்டத்தை நடத்தி புகைப்படங்களுக்கு சனத் திரள் உள்ளதாக காண்பிக்க முனைந்தனர். 

பாதயாத்திரையின் பிரதான நோக்கம் தாம் மேற்கொண்ட குற்றச் செயல்களை மூடிமறைப்பதாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல. அவர் சிறுகச் சிறுக செய்யும் இவ்வாறான செயற்பாடுகள் பெரியதொரு அழிவை எற்படுத்தும். அவர் தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாப்பதற்கு எதையும் செய்யத் தயங்க மாட்டார். அதற்காக நாட்டையும் மக்களையும் பகடைகாய்களாகப் பயன்படுத்துகிறார். இருந்தபோதிலும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகள் பற்றி மக்களுக்க நன்கு தெரியும். எனவே அதற்கான பதிலை உரிய நேரத்தில் வழங்குவார்கள். 

நாட்டில் தற்போது நல்லாட்சி நிலவுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து  நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்ளில் ஈடுபட்டுள்ளனர். சிங்கள,தமிழ் , முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்றுவதாக அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. அதனை ஐந்து வருட காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அதற்கான அங்கீகாரத்தை மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் தமது சுயநலனை அடிப்படையாகக்கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராகச் செயற்படுவதனை தடுக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது. எனவே ஒன்றிணைந்த எதிர்கட்சியின் இவ்வாறான நடவடிக்கைளை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.