வீரகேசரி இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் புதுவருட வாழ்துக்களை தெரிவிப்பதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.

பிறந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு அனைவருக்கும் வளமும் நலமும் செழிக்கும் ஆண்டாக  அமைய அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மிகவும் முக்கியமானதொரு அபாயத்தினை எதிர்நோக்கிய நிலையில் இம்முறை புத்தாண்டு வாழ்த்துக்களைத்  எமது வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே இந்தப் புத்தாண்டினை சுகாதார ரீதியான எச்சரிக்கைகள் மற்றும் சிபார்சுகளுக்கு உட்பட்ட வகையிலேயே கொண்டாட வேண்டிய அவசியமுள்ளது.

பொதுமக்களின் சுகாதார நலனை கருத்திற்கொண்டு விதிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் மற்றும் தடைகளை புத்தாண்டு நாட்களிலும் கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடுங்கள்.

எனவே இம்முறை புத்தாண்டினை எளிமையாகவும், ஆடம்பரமின்றியும் உங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் கொண்டாடுங்கள்.

உலக நாடுகளும் எமது நாடும் மக்களும் முகம்கொடுத்துள்ள இந்த நோய்த்தொற்று பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு உறுதியுடன் நாமனைவரும் கைகோர்த்து எமது புத்தாண்டு பிரார்த்தனைகளில் ஒன்றாக சேர்த்துக்கொள்வோம்.

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!