உலக அளவில் ஆண்டுதோறும் 9 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் புற்று நோய் தாக்கத்தால் மரணமடைகிறார்கள். அதிலும் குறிப்பாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் தற்பொழுது கண்டறியப்பட்டிருக்கும் stereotactic ablative radiotherapy என்ற சிகிச்சை முழுமையான நிவாரணம் வழங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இன்றைய திகதியில் நகர்ப்புறத்தில் வாழும் ஆண்களைவிட பெண்கள் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. சுவாச மண்டலங்களில் புற்றுநோயின் தாக்கம் ஏற்பட்டிருந்தால் வறட்டு இருமல், மூச்சுத்திணறலை அறிகுறியாக வெளிப்படுத்தும். சிலருக்கு நிமோனியா காய்ச்சலின் அறிகுறிகள் கூட தோன்றும்.
அதே தருணத்தில் வேறு சிலருக்கு மார்பகம் அல்லது முதுகில் மிதமான வலி ஏற்படக்கூடும். சிலருக்கு குரலில் மாற்றம் விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து நுரையீரலின் ஆரோக்கியம் குறித்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
பரிசோதனையின் முடிவில் நுரையீரலில் ஏதேனும் புற்று நோய் தாக்கம் இருந்தால் அதன் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வீட்டின் உட்புறத்தில் அழகுக்காக தொங்கவிடப்பட்டிருக்கும் திரைச்சீலைகள், விருந்தினர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பலகைகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் புகை மற்றும் தூசு கூட நுரையீரல் புற்று நோய் ஏற்படக்கூடும்.
சத்திரசிகிச்சை மூலம் இத்தகைய கட்டிகள் அகற்றப்படுகிறது. சிலருக்கு சத்திரசிகிச்சை செய்ய முடியாத சூழல் இருந்தால், அவர்களுக்கு stereotactic ablative therapy என்ற சிகிச்சையை வழங்கி, அவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க இயலும். இத்தகைய சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்ற வேண்டும்.
டொக்டர் பி தேவதாஸ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM