மாகாண சபைகளை மீண்டும் நிலைபெறச்செய்ய வேண்டும் - சுதந்திரக் கட்சி பரிந்துரை

Published By: Digital Desk 4

31 Dec, 2020 | 05:46 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மாகாணசபை தேர்தலை நடத்தும் வரை மாகாணசபைகளை மீண்டும் செயற்படுத்தவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்ய தீர்மானித்திருப்பதாக கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஆதரவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி |  Virakesari.lk

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நேற்று மாலை கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் கூடியது. 

கூட்டம் நிறைவடைந்த பின்னர் அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் அரசியல் நிலைவரம் மற்றும் கட்சியின் நடவடிக்கைகளை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட கட்சி மத்திய செயற்குழு கூட்டப்பட்டது. இதன்போது விசேடமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க  கட்சியில் இருந்து குழுவொன்றை நியமிக்க கட்சி தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. 

அதற்கமைய புதிய அரசியலமைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. 

மேலும் மாகாணசபை தேர்தல் இடம்பெறாமல் இருந்துவருவதால் பல வருடங்களாக மாகாணங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல்போயிருக்கின்றது. 

அதனால் மாகாணசபை தேர்தலை நடத்தும்வரைக்கும் கலைக்கப்பட்ட மாகாணசபைகளை மீண்டும் செயற்படுத்தி, மாகாணசபை உறுப்பினர்கள் தொழிற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பிரேரணை ஒன்றை அரசாங்கத்துக்கு முன்வைக்க தீர்மானித்திருக்கின்றோம்.

அத்துடன் மாகாணசபை செயற்பட்டு மாகாண சுகாதார அமைச்சர்கள் இருந்திருந்தால் தற்போதைய கொவிட் நிலைமையை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடிந்திருக்கும் என்றே நாங்கள் நம்புகின்றோம். 

அதனால் தேர்தல் இடம்பெறும்வரைக்கும் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை மீண்டும் செயற்படுத்தவேண்டும் என்பதே எமது பிரேரணையாகும். இதனை அரசாங்கத்துக்கு தெரிவிக்க இருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28
news-image

பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன்...

2025-12-16 09:10:48
news-image

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று...

2025-12-16 09:09:33
news-image

பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து...

2025-12-16 08:51:12