முட்டையின் மொத்த விற்பனை விலையை குறைக்க நடவடிக்கை..!

By J.G.Stephan

31 Dec, 2020 | 04:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)
முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதால் அதன் மொத்த விற்பனை விலை 12 ரூபாவால் குறைக்கப்படும் என முட்டை உற்பத்தி சங்கத்தின் தலைவர் சரத் அதநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தற்போது சந்தையில் முட்டையின் மொத்த விலை 14 ரூபாவாக உள்ளது. இவ்வாரம் மொத்த விலை 12 ரூபாவாக குறைக்கப்படும். நாளொன்றுக்கு முட்டை உற்பத்தி 70 இலட்சமாக காணப்பட்டது. தற்போதைய உற்பத்தி 85 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முட்டையின் சில்லறை விலையினையும் குறைக்க  பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right