ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தின் நேர கணிப்பீட்டாளர்கள் 7 பேர் நேற்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மத்திய மாகாணத்தின் தனியார் பேருந்து சபையால் நிர்வகிக்கப்படும் ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தின் நேர கணிப்பீட்டாளர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் -டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார அதிகாரி ஆர். ஆர். எஸ். மெதவெல தெரிவித்தார். 

கொவிட்- 19 தொற்றாளியுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியமையையடுத்து, இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் பழகிய கொவிட் 19 தொற்றாளர் ஹம்பாந்தோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

தனிமைப்படுத்தப்பட்ட 7 பேரிடமும் பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக ஹட்டன் - டிக்கோயா நகர சபை பொது சுகாதார அதிகாரி ஆர். ஆர். ஏஸ். மெதவெல தெரிவித்தார்.