மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று புதன்கிழமை (30) கூலிவேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் பேயுள்ளதாகவும் அவர் பயணித்த துவிச்சக்கரவண்டி பழுகாமம் குளத்துக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

Searches of missing doctor's vehicles yield no clues | State & Regional |  missoulian.com

பழுகாமம்  2 ஆம் பிரிவு வன்னி நகரைச் சேர்ந்த 52 வயதுடைய வல்லிபுரம் ஞானசேகரம் என்பவரே சம்பவதினமான நேற்று புதன்கிழமை காலையில் வழமையாக வீட்டில் இருந்து கூலிவேலைக்கு சென்றிருந்தவர் மாலையாகியும் வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவரை தேடும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டனர்.

இதன்போது அவருடைய துவிச்சக்கரவண்டி பழுகாமம் குளத்துக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதுடன்; அவர் சிலவேளை குளத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குளத்தில் தேடும் நடவடிக்கையினை பொலிசார் முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஞவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.