யுத்தக்காலத்தில் எங்களுக்கு தேசிய அடையாள அட்டை எவ்வளவு முக்கியமாக இருந்ததோ, அதைவிட முக்கியமானது தற்பொழுது முகக் கவசம் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் வெளியில் செல்லும்போது தங்களது முகக்கவசங்களை சரியான முறையில் அணிந்து போகவேண்டும். காரணம் நாங்கள் பார்க்கின்றோம், பலர் தங்களது தாடையின் கீழ் அணிந்து செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. உடம்பில் இருக்கின்ற மூன்று பகுதிகள் கொரோனா கிருமி நுழையக் கூடிய பகுதிகளாக இருக்கின்றது. ஒன்று கண், இரண்டாவது மூக்கு, மூன்றாவது வாய் ஆகவே நாங்கள் முகக்கவசத்தை சரியான முறையில் அணிய வேண்டும்.
தனிநபர் இடைவெளிகளை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டு நபர்கள் சேர்ந்து கதைக்கும் போது, கண்டிப்பாக சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆகவே மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM