மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் “டீல்” உள்ளது. அதாவது தம்மீது எழும் குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் தேவைப்படுகின்றார். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக்கி குழப்பத்தை ஏற்படுத்த ரணிலுக்கும் மஹிந்த அணியினர் தேவைப்படுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். 

தம் என்ன குற்றம் செய்தாலும், எவ்வாறு செயற்பட்டாலும் ரணில் தன்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் அவர் நடமாடுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.