மட்டக்களப்பில் 63 வர்த்தகர்களுக்கு கொரோனா தொற்று

Published By: Digital Desk 4

31 Dec, 2020 | 06:30 AM
image

மட்டக்களப்பு நகர் பஸார் வீதி மற்றும் காத்தான்குடி நகர் பகுதிகளில் உள்ள வர்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் 1 214 பேருக்கு புதன்கிழமை (30)  பொலிசார், இராணுவத்தினரிருடன் இணைந்து சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் 63  பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை (30) சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டபடி காத்தான்குடியிலுள்ள வர்தகர்கள் மற்றும் ஊழியர்கள் 665 பேருக்கும் மட்டக்களப்பு நகர் பஸார் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் ஊழியர்கள் 549 பேர் உட்பட 1214 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை  அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் மட்டக்களப்பு நகர் பஸார் வீதியில் மேற்கொள்ளப்பட் பரிசோதனையில்  காத்தான்குடியைச் சேர்ந்த 24 பேருக்கும், ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவருக்கும்  மட்டக்களப்பைச் சேர்ந்த  2 பேர் உட்பட 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் 10 பேர் பரிசோதனைக்கு செல்லவில்லை. அதேவேளை இதில் தொடர்புடையவர்களின் வர்த்தக நிலையங்களான ஆடையகங்கள், பென்சி கடைகள், குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை நிலையம் உட்பட் 17 கடைகளை சுகாதார அதிகாரிகள் மூடியுள்ளனர்.

இதேவேளை  காத்தான்குடியில்  665  பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன் அவர்களுடன் தொடர்புடைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட தொற்றாளர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வர்தக நிலையங்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்று திரும்பியவர்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58