இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் இசை அமைப்பில் தயாராகி இருக்கும் 'ஈஸ்வரன்' படத்தின் ஓடியோ வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகரும், இயக்குனருமான சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஈஸ்வரன்'. 

இந்தப் படத்தில் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். 

இவர்களுடன் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சிலம்பரசனின் 46 ஆவது படமாக தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைத்திருக்கிறார்.  

இப்படத்தில் இடம்பெற்ற 'தமிழன்..' எனத் தொடங்கும் பாட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், இப்படத்தின் ஓடியோ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதியன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே சிலம்பரசன் நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஈஸ்வரன்' பொங்கல் திருநாள் விடுமுறையில் வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.