(செ.தேன்மொழி)
அஹூன்கல்ல பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹூன்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலப்பிட்டி பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 7.15 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே  குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குழல் 12 ரக துப்பாக்கி ஒன்றும், தன்னியக்க துப்பாக்கி தோட்டா ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அஹூன்கல்ல பொலிஸார் சந்தக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்