சிரியாவில் இஸ்ரேல் முன்னெடுத்த வான் வழித் தாக்குதலில் ஒருவர் பலி, மூவர் காயம்

Published By: Vishnu

30 Dec, 2020 | 12:21 PM
image

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்ததாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிரிய அரபு செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது.

அதன்படி டமாஸ்கஸ் கிராமப்புறங்களில் உள்ள நபி ஹபீல் அமைந்துள்ள சிரிய வான் பாதுகாப்புப் பிரிவை இலக்காகக் இஸ்ரேல், புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வடக்கு கலிலி பகுதியிலிருந்து ராக்கெட் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

இதன்போது சிரிய வான் பாதுகாப்பு அமைப்பு சில ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து தடுத்து நிறுத்தியுள்ளது. இருந்தபோதும் இந்த அனர்த்தத்தின் விளைவாக ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று வீரர்கள் காயமடைந்ததாகவும் சிரிய அரபு செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை சிரிய வான் பாதுகாப்பு தலைமையகம் மற்றும் டமாஸ்காஸின் கிராமப்புறங்களில் ஈரானிய போராளிகளின் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுத்ததாக போர் கண்காணிப்பாளரான சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகமும் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52