தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடைபெறும் விருந்துபசார நிகழ்வுகளை கண்டறிய இன்று முதல் வியாழன் வரை சிறப்பு சோதனை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, குறிப்பாக இரவில் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் கூட்டங்கள் குறித்து சுற்றிவளைப்பு மேற்கொள்ள சிறப்பு பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதேவ‍ேளை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பண்டிகை காலங்களில் விருந்துபசார நிகழ்வுகளை நடத்தும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

சுகாதார அமைச்சினால் வர்த்தமானி செய்யப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின் படி உட்புற மற்றும் வெளிப்புற விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் எம்.பாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.