பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (03)  கைவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜே.ஏ.டி.பிரேமலால் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களின் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்று தருவதாக போக்குவரத்து அமைச்சினால் எழுத்து மூல கடிதம் கிடைக்கப்பெற்றுள்ள காரணத்தால் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவைக் கோரி கடந்த 4 நாட்களாக குறித்த பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.