லூசியானாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான லூக் லெட்லோ கொவிட்-19 தொற்று காரணமாக தனது 41 ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

கொவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்ததாக டிசம்பர் 18 அன்று அறிவித்த லெட்லோ, ஷ்ரெவ்போர்ட்டில் உள்ள ஓச்ஸ்னர் எல்.எஸ்.யூ ஹெல்த் என்ற மருத்துவ நிலையத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த லூக் லெட்லோ, டிசம்பர் மாத தேர்தல் ஓட்டப்பந்தயத்தில் லூசியானா மாநிலத்திலிருந்து 5 ஆவது அமெரிக்க பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லூசியானா அரசு, லூக் லெட்லோவுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காவும் பிரார்த்தனை செய்யுமாறு மாநில மக்களை வலியுறுத்தியுள்ளது.