மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை அடையாளம் காண்பதற்காக வெளியேறும் இடங்களில் எழுமாறாக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகளில் நேற்றைய தினம்  13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கை 10,986 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை குறித்த பரிசோதனை மூலம் இதுவரை 74 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சீரற்ற அன்டிஜன் சோதனைகள் ஜனவரி 5 ஆம் திகதி வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.