கிழக்கில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள் ; ஐந்து மரணங்கள் பதிவு

Published By: Digital Desk 4

29 Dec, 2020 | 10:04 PM
image

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் 1058 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

அதேநேரம் கடந்த 12 மணித்தியாலத்தில் (29) காலை 6 மணிமுதல் பகல் 12 மணிவரையில்  41 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கடந்த 12 மணிநேரத்தில் கல்முனை தெற்கில் 26 பேரும் கல்முiனை வடக்கில் 3 பேரும் காத்தான்குடியில் 4 பேரும் மட்டக்களப்பு, வெல்லாவெளி, ஆரையம்பதி, தமண, கோமரன்கடவல சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை ஆகிய  பிரதேசங்களில் தலா ஒருவருமாக 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போலியகொடை மீன்சந்தை கொத்தணியினால் கிழக்கு மாகாணத்தில் 4 சுகாதார பிராந்தியங்களான மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 138 பேருக்கும், திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 126 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் அம்பாரை சுகாதார பிராந்தியத்தில்  26 பேரும்; கல்முனை சுகாதார பிரிவில 768 பேருமாக கிழக்கில் 1058 போருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த கொரோனா தொற்றுக் காரணமாக கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 4 மரணங்களும் மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் ஒன்று உட்பட 5 மரணங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று கல்முனை நகர பொதுச் சந்தையில் அன்டிஜன் பரிசோதனையில் 27 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் கல்முனை பகுதியில் அண்மைக்காலமாக தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லுகின்றது. 

இதேவேளை நாங்கள் திட்டமிட்டபடி அன்டிஜன் பரிசோதனைகளை நடத்தமுடியாத காரணத்தினால் இந்த தொற்றுக்கள் மேலும் பரவலாம் பல இடங்களுக்கும் பரவலாம் என்ற அடிப்படையில் எங்களால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இன்று காலையில் கல்முனை கிராமசேவகர் பிரிவு 1,2,3, அதனுடன் சேர்ந்திருக்கின்ற ஏ.பி.சி. என்ற உப பிரிவுகளும், கல்முனைக்குடி கிராமசேவகர் பிரிவு 1,2,3, ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் அடங்கலாக எங்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 இந்த செயற்பாடானது எவ்வளவு காலத்துக்கு செல்லும் என்ற தீர்மானமானது அங்கிருக்கின்ற மக்களுக்கு பரிசோதனை, மற்றும் தொற்றினுடைய தாக்கம் அவதானிக்கும் பட்சத்தில். விரைவில் அந்த தனிமைப்படுத்தல் அகற்றப்படும். இருந்தும் அனைத்தும் அங்கிருக்கின்ற மக்களின் கைகளிலே தங்கியிருக்கின்றது.

அதேநேரம் மட்டக்களப்பு கல்லாறு பிரதேசத்தில் 100 பேருக்கு திட்டமிட்டபடி பரிசோதனைகள் மேற்கொண்டபோதும் எவருக்கும் தொற்று இல்லை அவ்வாறே காத்தான்குடி பிரதேசத்தில் 200 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள திட்மிட்டபோது அதுமுடியாத நிலையில் 13 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

திருகோணமலை சுகாதார வைதிய அதிகாரப் பிரிவில் 3 கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் அடையாள அட்டை எவ்வளவு முக்கியமானதே அதைவிட முக்கியமானது முககவசங்களை அணிவது.

முகக்கவசம் சரியான முறையில் அணியவேண்டும். சுகாதார துறை என்ற வகையில் எங்களுக்கு எந்தவித பாகுபாடும் இல்லை எங்களுடைய ஒரே ஒரு குறிக்கோள் தொற்றை கிழக்கு மாகாணத்தினுள் உள்நுழைவதை தவிர்க்கவேண்டும் அவ்வாறு தவிர்க்கப்படும் பட்சத்தில் தொற்று ஏற்பட்ட நபரில் இருந்து மற்றவர்களுக்கு தொற்றாமல் தவிர்க்கவேண்டும். 

அதுவும் முடியவில்லை என்றால் தொற்று  குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்துக்கு  பரவாமல் தடுக்கவேண்டும் என்ற ரீதியில் பொதுவானதாக எந்தவித மத, இன வேறுபாடுகளும் இன்றி நாங்கள் தொடர்ச்சியாக செய்துவருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04