முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்குளம் பகுதியில் சட்டவிரோதமாக தயாரித்த இடியன் துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த நபரிடமிருந்து துப்பாக்கியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்குளம் பகுதியில் வீட்டில் ஒருவர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட  துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார், துப்பாக்கி வைத்திருந்த நபரை கைது செய்துள்ளதோடு குறித்த  துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த  துப்பாக்கி குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு பொலிஸார், குறித்த நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.