கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணிநேரத்தில்(29.12.2020 6.00-12.00) 41 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார். 


மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், கடந்த 12 மணிநேரத்தில் கல்முனை தெற்கில் 24 பேரும், கல்முனை வடக்கில் 3 பேரும், காத்தான்குடியில் 4 பேரும், மட்டக்களப்பு வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் தலா ஒவ்வொருவருமாக 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகணத்தில் இதுவரை மொத்தமாக 1,058 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இன்று முதல் கல்முனையின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.