மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் உள்ள முந்திரியத்தோடடம் ஒன்றில் மரத்தின் கீழ் பாதுகாப்பாக பொலீத்தீன் பை ஒன்றினால் சுற்றிவைக்கப்பட்டிருந்த ரி 81 ரக துப்பாக்கி 49 ரவைகள், 2 மகசீன் என்பவற்றை இன்று (29) மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவு பொறுபதிகாரி, மற்றும் மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸ் குழவினர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (29) ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள முந்தியரிய தோட்டம் ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது மரம் ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி 81 ரக துப்பாக்கி, மகசீன் 2, 49 ரவைகள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
இவ்வாறு ரவைகள் மீட்கப்பட்ட முந்திரிகைத் தோட்ட உரிமையாளர் மீது விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM