வவுனியாவிலிருந்து மேல் மாகாணத்திற்கு செல்லும் அரச உத்தியோகத்தர்களின் கவனத்திற்கு

Published By: Digital Desk 4

29 Dec, 2020 | 08:58 PM
image

தற்போதைய சூழ்நிலையில் அரச திணைக்களங்களை சேர்ந்த பல்வேறு ஊழியர்கள் மேல்மாகணத்திற்கு சென்றுவருகின்றனர். அவர்கள் தொடர்பில் கவனமெடுக்குமாறு வவுனியா பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (29) நடைபெற்றது.  

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

வவுனியாவில் அமைந்துள்ள  பல்வேறு அரச திணைக்களங்களை சேர்ந்த அலுவலர்கள் பலர் மேல்மாகாணத்திற்கு சென்று வருகின்றார்கள். தொடர்ந்து இச் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது. 

அதனை நாம் ஒவ்வொருவராக கவனிப்பது மிகவும் கடினம். எனவே திணைக்களங்களின் தலைவர்கள் இந்த விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்குமாறும் அவர்களிற்கான விடுமுறைகளை குறைத்து கொள்ளுமாறும் கேட்டு கொள்கின்றேன்.

அவ்வாறு சென்றுவருபவர்கள் தனிமைப்படுத்தல் பிரதேசத்திற்கு செல்லவில்லை என்று சுகாதார பிரிவினரினால் சிபாரிசு செய்யப்பட்ட கடிதம் ஒன்றினை பெற்றுவரவேண்டும் என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதேவேளை வெளிமாகாணங்களில் இருந்து கிராமங்களிற்கு வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதுடன் அவர்களை இனங்காண வேண்டிய தேவையும் இருக்கிறது. 

இது தொடர்பாக பொதுமக்களே சுகாதார பிரிவினருக்கு அதிகமான தகவல்களை வழங்குகின்றனர். உண்மையில் கிராம சேவகர்களே இந்த விடயத்தை கையாளவேண்டும், கிராமங்கள் பற்றி அவர்களிற்கே நன்குதெரியும். 

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களிற்கு பிரதேச செயலாளர்கள் சென்றிருக்கின்றனர், சுகாதார பரிசோதகர்களும் சென்று எமக்கான ஒத்துழைப்புகளை வழங்கிவரும் நிலையில். சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இந்தவிடயத்தில். தமக்கு ஒத்துழைப்புகளையும் வழங்கவில்லை. எனவே நாம் ஒரு முறைமையை கடைப்பிடிக்கவேண்டும் என்று தெரிவித்தார். அவ்வாறான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மேலதிக அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44