பிக்பாஸ் புகழ் அனிதாவின் தந்தை காலமானார்...!

Published By: J.G.Stephan

29 Dec, 2020 | 05:43 PM
image

பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத், பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த வாரம் தான் எலிமினேட் செய்யப்பட்டு, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 

இந்நிலையில் அவரின் தந்தையும், எழுத்தாளருமான சம்பத் மரணம் அடைந்துள்ளார்.

இது குறித்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அனிதா, “எனது தந்தை சம்பத் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 62. அவர் உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் பார்த்தேன் என தெரிவித்துள்ளார். 

மேலும், நான் பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன போது அவர் ஷீரடிக்கு சென்றிருந்ததாகவும், அவரை தொலைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. இன்று காலை அவர் ஷீரடியில் இருந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இன்று(29.12.2020) காலை 8 மணிக்கு இந்த செய்தியை கேட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என்னால் நம்ப முடியவில்லை. தந்தையின் குரலை கேட்டு 100 நாட்களுக்கு மேலானதாக அனிதா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

குறித்த செய்தி அறிந்த அனிதாவின் ரசிகர்கள், அனிதாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right